உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பில்கேட்ஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.