Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்கள்…. திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தை மாப்பிள்ளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். அந்தப் பெண் தனது புகைப்படத்தை செல்போன் மூலம் வாலிபருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் உனது சொத்தை எனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து நீ யார் வீட்டிற்கும் சொல்லக்கூடாது. உனது உறவினர்கள் யாரும் திருமணத்திற்கு வரக்கூடாது என அந்த வாலிபர் கூறியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் வாலிபரை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் நிச்சயம் செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது அந்த வாலிபர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் இளம்பெண் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |