Categories
மாநில செய்திகள்

“பெட்ரோல் விலை ₹30 குறைய வாய்ப்பு”…. ஓ.பன்னீர்செல்வம் சொன்ன சூப்பர் ஐடியா….!!!!

மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் தமிழக அரசு கலந்து பேசி பெட்ரோலிய பொருள்கள் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பெட்ரோல், டீசல் விலை கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் நான்கு ரூபாயும் குறைக்கப்படும் என்று திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்று ஒருவருடம் முடிவடைந்த நிலையில் இன்னும் அதனை செய்யவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றபோது சென்னையில் பெட்ரோல் விலை 93 ரூபாய் 17 காசுகளுக்கு விற்பனையானது. ஆனால் தற்போது பெட்ரோல் விலை 110 ரூபாய் 75 காசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. டீசலை பொருத்தவரையில் 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த ஓராண்டில் மட்டும் டீசல் விலை 14 ரூபாய் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 17 ரூபாய் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க திமுக அரசு தற்போது வரை முன்வராமல் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என காரணம் கூறி வருகிறது. எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மத்திய நிதி அமைச்சர் உடனும் மற்றும் மாநில முதலமைச்சர்கள் உடன் கலந்து பேசி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து அனைத்து தரப்பு மக்களின் நலனை காக்க வேண்டும் என்று அனைத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும், பொது மக்களின் சார்பிலும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |