Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: கடலோர பகுதிகளில் உஷார் நிலை…. மத்திய உள்துறை அறிவுறுத்தல்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை வெடித்து வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மாநில காவல்துறைக்கும் மத்திய உள் துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |