Categories
பல்சுவை

தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி…. இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா?…. படிச்சா அசந்துடுவிங்க….!!!!

பொதுவாக நடைப்பயிற்சி செய்வது என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் பலரும் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். தினசரி அட்டவணையில் 30 நிமிடங்கள் செலவிட முயற்சி எடுத்து நடைபயிற்சி செய்யுங்கள். அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் அதிக நன்மைகளை தரும். நடைப்பயிற்சி செய்தால் எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உங்களின் எடை நிலையாக இருக்கும். உடல் பருமனை தடுக்கும். தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதயநோய் அபாயத்தை குறைக்கலாம்.அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க நடைப்பயிற்சி மிகவும் உதவுகின்றது.

தினந்தோறும் 30 நிமிடங்கள் நடப்பதால் உங்களை நோயில் இருந்தும் மற்ற நோய் தொற்றுகளில் இருந்தும் சுலபமாக பாதுகாத்துக் கொள்ள முடியும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அதனால் உங்களின் மன அழுத்தமும் குறையும். அவ்வாறு நடைபயிற்சி மேற்கொள்ளும் போது உங்களின் பாதமும் கைகளும் தொடர்ந்து அசைந்து கொண்டே இருக்கின்றது. முறையான நடைபயிற்சி உங்கள் எலும்புகளையும் உங்கள் தசைகளையும் மேலும் உறுதியாகின்றது.

முறையாக நடந்தால் நீங்கள் உண்மையில் உங்கள் இரத்த அழுத்த அளவுகளை பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். தினம்தோறும் மேற்கொள்ளும் நடைபயிற்சிக்கு சக்தி தேவை என்பதால் உங்கள் உடல் வேகமான விகிதத்தில் மூச்சை உள்வாங்கவும் வெளியேற்றவும் செய்கின்றது. அதனால் உடலில் உள்ள நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. எனவே தினமும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நடை பயிற்சிக்காக ஒரு 30 நிமிடம் ஒதுக்குங்கள்.

Categories

Tech |