Categories
சினிமா

நடிகை நயன்தாராவுக்கு…. முதல்வர் கொடுக்கப் போகும்….. திருமண பரிசு இது தானா?….!!!

நடிகை நயன்தாராவுக்கு, வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில், திருமணம் நடக்கவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்  ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில்,  திருமணம் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும், மேலும் நயன்தாராவின் திருமண வரவேற்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பு வைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் திரையுலக பிரபலங்கள் வீட்டு திருமண நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பசுமைக்கூடையை பரிசாக அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் மரக்கன்றுகள் அடங்கிய அந்த பசுமைக்கூடையில்  எழுதியிருப்பதாவது, நாம் மரம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும் என்கிற வாசகம் இடம் பெற்றிருக்கும். எனவே, நயன்தாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டால், நிச்சயம் பசுமைக் கூடையை பரிசாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் பதிவு திருமணம் நடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |