திரையுலகில் 20 வருடம் பயணம் குறித்து நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு நெகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.
துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று வெற்றி நடை போட்டு வருகிறார். நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக தனுஷ் வலம்வருகிறார். பல விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதை பற்றி கவலைப்படாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன், ஆடுகளம் என்று தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்துள்ளார்.
வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் மே 10 2002ஆம் ஆண்டு அன்று தனுஷ் நடிப்பில் துள்ளுவதோ இளமை படம் வெளியானது. திரையுலகில் தனுஷ் ஹீரோவாக அடியெடுத்து வைத்த நாள் இந்த நாள் தான். இந்நிலையில் இந்த நாளைப் பற்றி அவர் ஒரு நெகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திரைத்துறையில் 20 வருடம் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. நீங்கள் தான் என்னுடைய பலம், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. எண்ணம்போல் வாழ்க்கை என்று அவர் கூறியுள்ளார்.