சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தமிழ் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். 2004 ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி தனது திறமையால் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறினார். பின் 2007 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தோனியை தமிழ் மக்கள் அனைவரும் தங்களின் பிள்ளையாக பார்க்கிறார்கள். டோனிக்கும் சென்னை மக்களுக்கும் இடையே ஒரு இணைபிரியாத பந்தம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இவர் தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது என்றும் கூறப்படுகின்றது. நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் தோனியுடன் இணைந்துள்ளார். இவர் மூலம் திரைப்பட தயாரிப்பில் தோனி ஈடுபட உள்ளாராம்.