தென்கொரிய நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற யூன் சுக்-யியோல், வடகொரிய நாடு அணு ஆயுதங்களை கைவிட்டு விட்டு அமைதியான வழியில் செல்லவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
தென் கொரிய நாட்டின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். தென்கொரிய நாட்டின் சியோல் நகரத்தில் நடந்த பதவியேற்பு விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா கைவிடவேண்டும் என்றார்.
மேலும், அமைதியான வழியில் சென்றால் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ தென்கொரியா தயார் என்று கூறியிருக்கிறார். அதாவது, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை செய்து பக்கத்து நாடுகளை அச்சறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, தான் தென்கொரியாவின் புதிய அதிபர் இவ்வாறு கூறியிருக்கிறார்.