Categories
பல்சுவை

அடடே! பிரபல நாட்டில் பூனைக்கு சிலை…. எதற்காக தெரியுமா….? வாங்க பார்க்கலாம்…!!

ஸ்காட்லாந்தில் பிரபலமான கிளாண்ட்ரட் டிஸ்டில்லரி என்ற விஸ்கி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் முன்பாக டவுசர் தி மவுசர் என்ற பூனை சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பூனைக்கு எதற்காக சிலை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது டவுசர் தி மவுசர் என்ற பூனை கடந்த 24 வருடங்களில் தொழிற்சாலையில் இருந்த 28,899 எலிகளைக் கொன்றுள்ளது. உலகத்திலேயே அதிக எலிகளைக் கொன்ற பூனை என்ற பெருமையை டவுசர் தி மவுசர் பெற்றுள்ளது. இந்தப் பூனை அதிக எலிகளை கொன்றதால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாகத்தான் டவுசர் தி மவுசர் பூனைக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |