Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியால் கேக் வெட்டிய புள்ளிங்கோ : திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் நண்பனின் திருமணதன்று பட்டா கத்தியுடன் சக நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவேற்காட்டில்  உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் நான்கு அடி உயர  பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமன்றி மற்றொரு மாணவன் பட்ட கத்தியோடு நடனமாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரவுடி பினு ஸ்டைல் கடந்தவாரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.  இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டக்கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |