வடகொரியாவில் ஆண்கள் பத்து வருடங்கள் ராணுவத்தில் நிற்க வேண்டுமாம். அதேபோல பெண்களும் சில காலம் ராணுவத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டுமாம். ஆனால் தென் கொரியாவில் ஆண்கள் இரண்டு வருடம் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். பெண்கள் விருப்பப் பட்டால் மட்டுமே இராணுவத்தில் இணைந்து கொள்ளலாம்.
வடகொரியாவில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஏழை மக்களாக உள்ளார்கள். தென்கொரியாவில் 10 சதவீதத்திற்கும் கீழே உள்ள மக்கள்தான் ஏழைகளாக இருக்கிறார்கள்.
வடகொரியாவில் யாராவது கையில் பைபிள் அல்லது குரானை வைத்து இருந்தால் அவர்களை வெட்டி விடுவார்களாம். ஆனால் தென் கொரியாவில் பாதி மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளார்கள்.
வட கொரிய மக்கள் 2ஜி இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள். அதுவும் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் 4ஜி இணைய சேவை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு இணைய தளங்களையும் பயன்படுத்த முடியாது. அவர்கள் நாட்டில் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் தான் செய்ய வேண்டும். அதை மீறி அவர்கள் எதையும் செய்ய முடியாது. ஆனால் தென் கொரியாவில் உலக அளவில் அதி வேகமான இணைய சேவையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வடகொரியாவில் அதனுடைய எல்லை தாண்டினால் மக்களை சுட்டு விடுவார்கள். ஆனால் தென்கொரியாவில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக போகலாம்.
வட கொரியாவில் இருக்கும் மக்கள் 100% கட்டாயம் ஓட்டு போட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களை சுட்டு விடுவார்கள். ஆனால் அந்த தேர்தலில் ஒருவர் மட்டுமே நிற்பார். அதுதான் அதில் சுவாரஸ்யம். தென் கொரியாவில் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம்.