ஒருவர் மீது துப்பாக்கி குண்டு தலை தவிர வேறு எந்த பகுதிகளில் பட்டாலும் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர் Jacob Miller. இவர் அமெரிக்காவில் 1863-ஆம் ஆண்டு நடந்த சிவில் வாரில் Jacob கலந்து கொண்டார். அப்போது எதிரிகள் Jacob-ன் நடு நெற்றியில் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் எந்தவித உணர்வும் இன்றி Jacob இறந்தது போல கீழே விழுந்துவிட்டார்.
இதனை அடுத்து உடன் போராடிய வீரர்கள் Jacob இறந்ததாக நினைத்து அவரை அங்கேயே விட்டு சென்றனர். ஆனால் சில மணி நேரம் கழித்து Jacob கண்விழித்து எப்படியோ அங்கிருந்து கிளம்பி தனது உயிரை காப்பாற்றிக் கொண்டார். இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் நெற்றியில் குண்டு பாய்ந்தும் உயிர் பிழைத்த Jacob நெற்றியில் ஓட்டையுடன் 54 வயது வரை வாழ்ந்துள்ளார்.