Categories
அரசியல் தேசிய செய்திகள்

பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் – பாஜக எம்.பி பர்வேஸ் வர்மா சர்ச்சை பேச்சு…!

துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாஜக பாரதிய ஜனதா எம்பி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.

பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்பியான பர்வேஸ் வர்மாவின் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளனர். விகாஸ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய பர்வேஸ் வர்மா டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு நிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் இடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராக ஒரு மாத காலமாக டெல்லி ராஜ்பாத்தில் நடந்து வரும் போராட்டம் குறித்து  பாரதிய ஜனதா எம்பி பர்வேஷ் ஷர்மா சாடியுள்ளார் போராட்டக்காரர்களை தீர்த்துக்கட்ட ஒரு மணிநேரம் மட்டும் போதும் என்று பர்வேஸ் வர்மா கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாரதிய ஜனதா எம்பியின் பேச்சு கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.

Categories

Tech |