Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சாய் பல்லவி நடிக்கும் “கார்கி”…. வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!

நடிகை சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

இந்நிலையில் இவர் தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை ஜெனி அண்ட் லெப்ட் ஃபிட் புரோடக்சன்ஸ், ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்ய லக்ஷ்மி, தாமஸ் ராஜ், கௌதம் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படும் இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

கார்கி என பெயர் வைக்கப்பட்டுள்ள இத் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகின்றது. மூன்று மொழியிலும் சாய்பல்லவி தனது குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியாகி உள்ளது. வெளியாகி அந்த போஸ்டரில் சாய்பல்லவி நிற்க அவரின் பின்னால் நீதிதேவதை ஒரு கையில் தராசுடனும் மற்றொரு கையில் வாலுடனும் நிற்பது போல் காட்சியளிக்கின்றது.

Categories

Tech |