இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மற்ற இருவரின் நிலை கவலைக்கிடமாக தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொழும்பு பகுதியில் பெரும் பரபரப்பு தற்போது ஏற்பட்டிருக்கிறது.