Categories
பல்சுவை

“தலை முடி பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா”?…. தயிருடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க….. நல்ல பலன் கிடைக்கும்….!!!!

முடி வேகமாக வளர தயிரோடு இந்த ஒரு பொருளை சேர்த்து நீங்கள் பயன்படுத்தி வந்தால் முடி மிகவும் நன்றாக வளரும். அதை பற்றிதான் இதில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பல பெண்களுக்கு முடி உதிருதல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு தயிர் மிகவும் முக்கிய பங்களிக்கின்றது. தயிரில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. இதில் வைட்டமின், தாது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான மூலப்பொருட்கள் உள்ளது. இது உங்கள் தலைமுடி பிரச்சினைக்கு மிக சிறந்த தீர்வாக உள்ளது. தலை முடி பிரச்சனைக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.

தயிருடன் நெல்லிக்காய் தூளைக் கலந்து பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக உங்களது முடி வளர்ச்சி அடையும். ஏனெனில் நெல்லிக்காய் முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.

என்ன செய்ய வேண்டும்:

ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலந்து அவற்றை உங்கள் உச்சந்தலையில் இருந்து முடிவு வரை தடவ வேண்டும். அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் உங்களது முடியை ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்யும்போது உங்களது தலைமுடி பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்.

உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது:

தலைமுடி வளர்ச்சிக்கு தயிரை தினமும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தயிரில் விட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மினரல்கள் உள்ளன. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினை இருப்போர் தினமும் ஒரு பௌல் தயிர் சாப்பிட்டால் நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையாகவே தயிரில் புரோபயாடிக்குகள் என்ற அமிலம் உள்ளது.  தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் குடலுக்கு மிகவும் நல்லது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . குடல் ஆரோக்கியமாக இருந்தால் 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் ஜீரணசக்தி வேகமாக இருக்கும்.

Categories

Tech |