பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் 18 லட்சம் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு ஊழியர்களை தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப் சிங் உள்பட இருவரை கைது செய்தனர். இந்நிலையில் சுங்க சாவடி பொருளாளர் அளித்த புகாரில் சுங்கச்சாவடியில் நடந்த மோதலின்போது ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் எஸ்பி சற்று முன்பாக இங்கு ஆய்வு செய்திருக்கிறார்கள். சுங்கச்சாவடியில் உள்ள CCTV கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.