Categories
மாநில செய்திகள்

கைது செய்யாதீங்க…. அப்படி செஞ்சா ? எச்சரித்த மு.க.ஸ்டாலின் …!!

அமைச்சர் எஸ் பி வேலுமணி  விமர்சித்ததற்காக திமுகவினர் மீண்டும் கைது செய்யப்பட்டால் கோவையில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டம் அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் SP வேலுமணியை பற்றி பேசியதற்காக திமுகவைச் சேர்ந்த ஏவி முத்துலிங்கம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு கிராம சபை என்பது மக்கள் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் கூட்டம் என்றும், அமைச்சர் வேலுமணியை எதிர்த்துப் போராடினால் ,

குறை சொன்னாலும் கைது என்ற அடக்குமுறையை ஏவி விடுவது வெட்கக் கேடானது என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார். அமைச்சர் பதவிக்கு இன்னும் 18 மாதங்கள் தான் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் அமைச்சர் எஸ் பி வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால் கோவைக்கு வந்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |