Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்…

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்திலிருந்து அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் கோவிலில் அதிகாலை முதல் அடிவாரம், பாத விநாயகர் கோவில், மலை கோவில், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து நிறைய வண்டிகளில் பக்தர்கள் வந்ததால் பழனியில் உள்ள சுற்றுலா பேருந்து நிலையம் நிரம்பி உள்ளது. இதனால் அய்யம்புள்ளி சாலை, பூங்கா ரோடு கிரி வீதிகளில் பக்தர்கள் தங்களது வண்டிகளை நிறுத்தினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

மேலும் பக்தர்கள் அதிகமாக வந்ததால் கோவிலில் உள்ள பொது கட்டணம், கட்டளை உள்ளிட்ட தரிசன வழிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் தரிசன வழிகளையும் கடந்து வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திர கழு திருவிழா நேற்று தொடங்கியதை அடுத்து நிறைய பக்தர்கள் காலை மாலை கிரிவலம் வந்துள்ளார்கள். அதன்பின் அவர்கள் திருஆவினன்குடி, மலைக்கோயில் முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர். இந்த கழு திருவிழா இன்னும் 13 நாட்கள் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது

Categories

Tech |