கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு ஆனந்த் மகேந்திரா குழுமம் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதனை நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அந்த பாட்டியிடம் சாவி வழங்கப்பட்டது.
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமானவர் கமலாத்தாள். இவருக்கு வயது 75. இவர் கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவரது சேவையை பாராட்டி பல அமைப்புகளும் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாட்டியை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு, மகேந்திர குடும்பத்தின் சார்பில் 1.75 சென்ட் நிலம் வாங்கி அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் ஜனவரி 28ஆம் தேதி பாட்டிக்கு வீடு மற்றும் இட்லி கடை ஒன்றாக இருப்பது போல் 7 லட்சம் ரூபாய் செலவில் பூமி பூஜை போடப்பட்டது. கடந்த ஐந்தாம் தேதி அன்று வீடு கட்டி முடிக்கப்பட்டது. அதையடுத்து அன்னையர் தினமான நேற்று ஆனந்த் மகரிஷி குழுமத்தின் செயல் அதிகாரி அந்த வீட்டின் சாவியை பாட்டியிடம் வழங்கியிருக்கிறார். இதுகுறித்து ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் “எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவருக்கு சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை” என்று நெகழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.