Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

காணாமல் போன சிறுவன் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான நிஜிபூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான அதில் முகமது(12) என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜிதா தனது மகன்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திட்டுவிளை கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த 6-ஆம் தேதி விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற ஆதில் முகமது நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சுஜிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மனத்தடை பகுதியில் இருக்கும் ஒரு குளத்தில் மீன் பிடிப்பதற்காக சிலர் சென்றுள்ளனர்.

அப்போது சிறுவனின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை வீசி சென்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |