முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போது மீண்டும் வெளிநாடு பயணம் செல்கிறார். அதன்படி ஜூன் மாதம் இறுதியில் லண்டன், ஜூலையில் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் மேலும் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல்வருடன் லண்டன் சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பென்னிகுயிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பென்னி குயிக் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் ஆவர்.