தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த மே 3-ம் தேதி தொடங்கியது. மே 28 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வெப்பத்தை சமாளிப்பது எப்படி என்பது குறிப்பு இந்த பதிவில் பார்க்கலாம். கோடை காலம் எதிர் வரும் நிலையில் வீட்டில் தங்குவது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. இப்படியான சூழலில் வீட்டில் கடுமையான வெயிலின் போது எவ்வாறு குளிர்ச்சியாக வைக்கலாம் என்பதற்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.
செடிகளை வளர்ப்பது:
உங்கள் வீட்டிற்குள் காற்று வரும் வழியில் அதாவது ஜன்னல்கள் மற்றும் கதவுகள் முன்பு செடிகளை வைத்தால், வீட்டிற்குள் வரும் காற்று குளிர்ச்சியோடு இருப்போம். அதுமட்டுமல்லாமல் துய்மையை ஏற்படுத்தும். எனவே கோடை காலங்களில் தூய்மையான காற்றை செடிகள் மூலம் சுவாசிக்க முடியும்.
வீட்டின் ஜன்னல்கள்:
கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கு உங்கள் வீட்டில் போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும்.அதனால் இயற்கையான காற்று வீட்டிற்குள் வருவதற்கு ஏதுவாக வீட்டிலுள்ள ஜன்னல்களை எல்லாம் திறந்து வைப்பது நல்லது.
மின்விசிறி பயன்படுத்துதல்:
உங்கள் வீட்டில் ஏசி இல்லை என்ற கவலை வேண்டாம். ஏசி-களுக்கு பதிலாக மின்விசிறியை பயன்படுத்தலாம். அதிலும் முடிந்த அளவிற்கு டேபிள் மின்விசிறியை பயன்படுத்தினால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
வீட்டின் மின் விளக்குகளை மாற்றுதல்:
பொதுவாக கோடை காலங்களில் வீடுகளில் குறைந்த ஆற்றல் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அதிக ஆற்றல் கொண்ட மின் விளக்குகள் அதிக அளவு வெப்பத்தை வெளியீட்டு வீட்டை வெப்பமாக வைக்கும். அதனால் குறைந்த ஆற்றல் கொண்ட மின் விளக்குகளை பயன்படுத்தினால் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.
வீட்டிற்கு வெளியே மரம் வளர்ப்பது:
வீட்டிற்குள் செடி வைப்பதைப் போலவே, வீட்டிற்கு வெளியே மரம் வளர்ப்பது மிகவும் நல்லது. அப்படி மரம் வளர்த்தால் வீட்டிற்குள் வரும் காற்றை குளிர்ச்சியாக அது கொடுக்கும். எனவே முடிந்த அளவிற்கு வீட்டிற்கு வெளியே மரத்தை வளர்ப்பது மிகவும் நல்லது.
மின் சாதனங்களை அணைத்தல்:
நீங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் மிக்ஸி போன்ற பொருட்கள் அதிக அளவு வெப்பத்தை வெளியிட கூடியவை. அதனால் வீட்டில் எப்போதும் வெப்பம் நிலவும். எனவே இவற்றை பயன்படுத்தாத நேரத்தில் அணைத்து வைப்பது நல்லது.
வீட்டின் கதவுகளை மூடுதல்:
வீட்டில் ஏசி பயன்படுத்தினால் வீட்டில் உள்ள அனைத்து கதவுகளும் முழுமையாக மூடப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் வீட்டின் கதவில் ஏதாவது சேதம் இருந்தால் அதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். வீட்டின் கதவுகள் சரியாக மூடவில்லை என்றால் ஏசி காற்று அதிக அளவு வெளியேறிவிடும்.
பருத்தி திரைசீலை பயன்படுத்துதல்:
உங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களுக்கு பயன்படுத்தக்கூடிய திரைச்சீலைகளை பருத்தித் துணியில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனென்றால் வெளியிலிருந்து வீட்டிற்குள் வரக்கூடிய காற்றில் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை ஊட்டும். அதனால் ஜன்னல்களுக்கு பருத்தி துணிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
கோடை காலங்களில் இதையெல்லாம் பின்பற்றினால் வீட்டை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.