Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து?….. இதுதான் காரணமாம்….. ரயில்வே நிர்வாகம் அதிரடி….!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்த முடிவை எடுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் அதிகப்படியான மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு நிலக்கரி தட்டுப்பாட்டை போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதனால் தற்போது நாடு முழுவதும் 1,500 பயணிகள் ரயில்களை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நிலக்கரியை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக தங்களது இலக்கை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் 20 நாட்களுக்கு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அனல் மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலக்கரி விரைவாக அங்கு செல்லும் வகையில் ஏற்கனவே 670 ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்திருந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருவது ரயில் பயணிகள் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக சத்தீஸ்கர், ஒரிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு கடும் சிரமம் ஏற்படும். ரயில் பயணம் செல்ல உள்ளவர்கள் கவனமாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |