சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என அம்மாநில எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கர்நாடகா பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்தனால் எம்எல்ஏ விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி முதல்-மந்திரி பசவராஜ் கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும். மேலும் உத்தரப்பிரதேச மாதிரியில் இங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இது தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த ஒலிபெருக்கிகளை நீக்காவிட்டால் இந்து கோவில்கள் பக்தி பாடல்களை ஒலிக்க செய்வதாக ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு நானும் ஆதரவு வழங்குவேன். அரசின் அலட்சியமாக நடந்து கொள்ளும் போக்கினால் மாநிலத்தில் மோதல் நிலை ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இதனால் இதனை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் பசனகவுடா பட்டீல் யத்தனால் தெரிவித்துள்ளார்.