Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் கடத்தப்பட்ட 12 கிலோ புகையிலை பொருட்கள், 1/2 கிலோ கஞ்சா”…. கைப்பற்றிய சிறப்பு படை போலீசார்…!!!!!

ரயிலில் இருந்த 12 கிலோ புகையிலை பொருட்கள், 1/2 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

மது பாட்டில்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரயில்களில் கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சிறப்பு படையினர் புவனேஸ்வரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது ஆலக்குடி-பூதலூர் இடையே ரயில் சென்ற பொழுது இரண்டு பெட்டிகளை இணைக்ககூடிய இடையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பை இருந்ததையடுத்து போலீசார் சோதனை செய்த போது அதில் பாட்டில்கள் இருந்ததை அடுத்து திறந்து பார்த்த பொழுது அவற்றில் கஞ்சா கலந்த பீடித்தூள் இருந்தது தெரியவந்தது.

மேலும் அந்த பை அருகே பிளாஸ்டிக் பை இருந்தது. அதில் அரை கிலோ கஞ்சா இருந்துள்ளது. மேலும் அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் இருந்தது. அதில் மொத்தம் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் அரை கிலோ கஞ்சா இருந்ததையடுத்து போலீசார் கைப்பற்றி திருச்சி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |