ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கிய நிலையில் வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறுகின்றது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் சேரிங்கிராசில் கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பாக அரியவகை பறவைகள், வனவிலங்குகள் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் அம்ரித், உதவி வனபாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.
இந்தக் கண்காட்சியில் பச்சை சிட்டு, மரக்கொத்தி, நீல சிட்டு, தேன் சிட்டு என பல வகை பறவைகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் இதில் வண்ணத்துப்பூச்சிகள், நீர்வீழ்ச்சிகள், வனவிலங்குகள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கண்காட்சிக்கு எந்தவித நுழைவு கட்டணமும் இல்லாத நிலையில் வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறுகின்றது.