Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான ரோந்து படகுகள்…. 3 மணி நேர போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் ரோந்து படகுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் அம்பி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அம்பி சென்னை கடலோர காவல்படைக்கு சொந்தமான பயன்படுத்த முடியாத பழைய 3 ரோந்து படகுகளை ஏலம் எடுத்தார். இந்த படகுகள் எண்ணூர் கடற்கரை சாலையில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று படகுகளுக்கு அருகிலிருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் தீ வேகமாக ரோந்து படகுகளில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு படகுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு படகுகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |