‘தளபதி 66’ படப்பிடிப்பில் விஜய் செய்த செயல் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”தளபதி 66” படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய் செய்த செயல் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதன்படி, பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அல்லாத சமயத்தில் வேறு இடத்திற்கு சென்று விடுவது வழக்கம். ஆனால், விஜய் இந்த படத்தில் மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கபடுவதையும் நேரில் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.