Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 28.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

28-01-2020, தை 14, செவ்வாய்க்கிழமை

திரிதியை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.

சதயம் நட்சத்திரம் காலை 09.23 வரை பின்பு பூரட்டாதி.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.

மாத சதுர்த்தி.

விநாயகர் வழிபாடு நல்லது.

சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள்

காலை 8.00-9.00,

மதியம் 12.00-01.00,

மாலை 04.30-05.00,

இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் – 28.01.2020

மேஷம்:

இன்று அனைத்து விஷயங்களையும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். ஒருசிலருக்கு வேலை காரணமாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புக்கள் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். பொன் பொருள் போன்றவை இன்று சேரும்.

ரிஷபம்:

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தாமதப்பட்டு வந்த காரியங்கள் கூட இன்று எளிதில் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.

மிதுனம்:

இன்று குடும்பத்தினரிடம் சிறிய மனக்கசப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்தமான நிலை உருவாகும். உத்தியோகத்தில்  உள்ளவர்களுக்கு  எதிர்பாராத பிரச்சினைகளால் டென்ஷன் உருவாகும். வேலையாட்களை கொஞ்சம் அனுசரணை செய்தால்  தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றத்தை காண முடியும்.

கடகம்:

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் மனதில் குழப்பத்துடனும் கவலைகள் உடனும் தென் படுவீர்கள். பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளுடன் கவனமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். வெளியூர்  செல்வதை தவிர்ப்பது சிறப்பானது. இன்று எதிலும் கவனமாக இருத்தல் நன்று.

சிம்மம்:

இன்று நீங்கள் அனைத்து செயலையும் மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சொந்தங்கள் வாயிலாக இணைய செய்திகள் இல்லம் தேடி வரும். வியாபாரத்தில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் நல்ல பலனைக் கொடுக்கும். தெய்வீக வழிபாடு நிம்மதியைத் கொடுக்கும்.

கன்னி:

இன்று மாணவ மாணவிகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சிக்கனத்தைக் கடைபிடிப்பதன் மூலம் செலவுகள்  அடங்கியிருக்கும். இன்று தேவை  அனைத்தும் நிவர்த்தி ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். வங்கியில் சேமிப்புகள் அதிகரிக்கும்.

துலாம்: 

இன்று உறவினர்களிடம் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதி குறைந்த சூழல் உருவாகும்.. உடல் நலத்தில் கவனம் தேவை விலை உயர்ந்த பொருட்களால் சேமிப்பு தொகை குறையும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் முன்னேற்றத்தை காண கூடும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

விருச்சிகம்:

இன்று இல்லத்தில் ஒற்றுமை குறைந்து பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகனங்களால் தேவையற்ற செலவுகள் உருவாகும். உடல்நலத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்றால் வேலைகளும் குறைவடையும். நண்பர்கள் உதவுவதால் கடன்கள் வசூலாகும்.

தனுசு:

இன்று பணியை திறம்பட முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். தொழில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். இன்று கடன் தொல்லை குறையும்.

மகரம்:

இன்று குடும்பத்தில் மருத்துவச் செலவு ஏற்படும். புதிய பொருளினை வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரணை செய்துகொள்வது நல்லது. சுப நிகழ்ச்சிக்கான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். வராமல் நாள்பட்ட இருந்த கடன்கள் இன்று வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும்.

கும்பம்:

இன்று தொழிலில் பொருளாதார தொடர்பாக வளர்ச்சியை அடைவீர்கள். புதிய பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். சொத்துக்களினால் நல்ல பலன் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மீனம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றி பெறும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உற்றார் உறவினர்களால் நன்மை நடக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல்-வாங்கலில் மிகவும் கவனம் தேவை.

Categories

Tech |