Categories
தேசிய செய்திகள்

84 வருடங்கள் உணவு, தண்ணீர் அருந்தாமல்… உயிர் வாழ்ந்த ஒரே மனிதர்…. வியக்க வைக்கும் உண்மை சம்பவம்….!!!!

குஜராத் மாநிலத்தில் Prahlad Jani என்பவர் தனது 7 வயதில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எதையுமே சாப்பிடாமல் தொண்ணூத்தி ஒரு வயது வரை உயிர் வாழ்ந்து இறந்துவிட்டார். எண்பத்தி நான்கு வருடங்களாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அம்பா தேவி அவரை பார்த்துக் கொள்வதாகவும் அவர் உயிர் வாழ உணவும் தண்ணீரும் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர் இப்படி இருப்பதை அறிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் வரும் DIPAS விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் 2010ஆம் ஆண்டு இவரின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்க ஒரு 15 நாட்களுக்கு ஒரு கண்காணிப்பு ஆய்வை மேற்கொண்டனர். அதாவது உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவரால் உயிர் வாழ முடியுமா என்று சோதிக்க ஒரு அறையில் 15 நாட்கள் அடைத்து வைத்து கேமரா மூலம் கண்காணித்தனர்.

பின்பு 15 நாட்கள் கழித்து அவரை பரிசோதித்த பிறகு சாதாரண மனிதனின் உடல் எப்படி இருக்குமோ அப்படி தான் அவரது உடலும் இருந்தது. எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அது மட்டுமல்லாமல் அவரை கவனித்த மருத்துவர்கள் வாய் கொப்பளித்து குளிக்கும் போது தான்அவருக்கு திரவங்கள் வந்ததாக கூறியுள்ளனர். இவரை கண்டு மருத்துவர்கள் திகைத்துப் போயினர். எவ்வித உணவும் தண்ணீரும் இல்லாமல் கிட்டத்தட்ட 84 வருடங்கள் உயிர் வாழ்ந்து தனது 91 வயதில் மரணமடைந்தார்.

Categories

Tech |