சீனாவில் பரவத் தொடங்கிய கொரோன வைரஸ் பலரது உயிரை பறிக்கும் ஆபத்து ஆக மாறி வருகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் இதுவரை 80 உயிர்களை பறித்துள்ளது சீனாவில் மட்டும் 2744 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 461 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் 1974 வரை வைரஸ் தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஓகன் நகரிலிருந்து பயணித்தவர்கள் மூலம் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பரவி இருக்கிறது. தாய்லாந்தில் 8 பேருக்கு பரவியுள்ளது, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா 5 பேருக்கு இந்த வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது, சிங்கப்பூர், தைவான், மலேசியா, தென்கொரியா போன்ற நாடுகளில் தலா 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 3 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வியட்நாமில் இரண்டு பேருக்கும் நேபாளம் மற்றும் கனடாவில் தலா ஒருவருக்கும் கொரோன வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.