Categories
மாநில செய்திகள்

“பிறையில் முழுநிலா உறைவது போல, உன் ஓராண்டு ஆட்சியில் நூறாண்டுச் சாதனைகள்”….தமிழக முதல்வருக்கு…. கவிஞர் வைரமுத்து வாழ்த்து….!!!!

கவிஞர் வைரமுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,ஓராண்டை நிறைவு செய்துள்ளதையடுத்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. எனவே இதை முன்னிட்டு, திமுக சார்பில் பல நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, கோபாலாபுரத்தில் உள்ள தம்  இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி பெற்றுள்ளார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்துள்ளதாவது,

“முதலமைச்சே

பிறையில் முழுநிலா
உறைவது போல
உன்
ஓராண்டு ஆட்சியில்
நூறாண்டுச் சாதனைகள்

என்றாலும் எதிர்ப்பு

கொம்புள்ள யானையும்
கொள்கையுள்ள தலைவனுமே
குறிவைக்கப்படுகிறார்கள்

கொம்பு மட்டுமா

திராவிடக் காடுகாக்கும்

தெம்புள்ள யானை நீ

பேனாவோடு
புதைக்கப்பட்ட கலைஞர்
உனக்கொரு கவி வரைவார்” என கவிஞர் வைரமுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை கவிதையின் வாயிலாக பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |