அமெரிக்காவில் சூசை என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் வனப்பகுதி இருப்பதால் அங்கு வசிக்கும் சில மான்கள் தினமும் சூசையின் வீட்டிற்கு வரும். இந்த மான்களுக்கு சூசை தண்ணீர் மற்றும் உணவுப் கொடுப்பார். இந்நிலையில் 1 மான் மட்டும் சில நாட்களாக சூசையின் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளது. இதை கவனித்த சூசை மானிற்கு என்னானது என பார்ப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது மானை யாரோ வேட்டையாட முயற்சி செய்த போது வில் ஒன்று மானின் தாடையில் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்மணி மானிற்கு உதவுவதற்காக சென்றுள்ளார்.
ஆனால் சூசையை பார்த்தவுடன் மான் அங்கிருந்து ஓடிவிட்டது. இதனையடுத்து சூசை விலங்குகள் பாதுகாப்பகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சூசை கொடுத்த தகவலின் பேரில் விலங்குகள் பாதுகாப்பகத்திலிருந்து வந்து மானிற்கு மயக்க ஊசி செலுத்தி அதன் தாடைப் பகுதியில் இருந்த வில்லை அகற்றினர். அதன் பிறகு சிறிது நாட்களில் மான் பூரணமாக குணமடைந்து. அந்தமான் தனக்கு உதவி செய்தது சூசை என்பதை உணர்ந்து கொண்டதால் அவருடன் நட்பாக பழக ஆரம்பித்துள்ளது.