இந்த உலகில் பல ஆபத்தான விஷயங்கள் உள்ளது. அதை தெரிந்து கொள்ளும்போது மிகவும் விசித்திரமாக இருக்கும். அந்த வகையில் இந்த உலகில் மிக ஆபத்தான நாய்களை பற்றிய தகவலை தான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். நாய்கள் நன்றியுள்ள ஜீவன் எனவும் ,பாசமாக இருக்கும் ஒரு செல்லப்பிராணி எனவும் அனைவருக்கும் தெரியும். இந்த உலகில் 340 க்கும் மேற்பட்ட நாயினம் உள்ளது. ஒவ்வொரு நாய்க்கு ஒவ்வொரு வகையான திறமை இருக்கும். சில நாய்கள் வேகமாக ஓடும். சில நாய்கள் சிறப்பாக மோப்பம் புடிக்கும். அதேபோல் சில நாய்கள் மிகவும் ஆபத்தானது எனவும் கூறுகிறார்கள். அப்படி ஆபத்தாக இருக்கக்கூடிய அமெரிக்கன் பிட்புல் என்ற நாய் பற்றி தான் பார்க்க போகிறோம்.
இது பார்ப்பதற்கு மிக சிறியதாக இருக்கும். ஆனால் மிகவும் வேகமாக ஓடும் திறன் கொண்டது. மிக உயரமாக ஜம்பிங் செய்யும் திறன் கொண்டது. இந்த நாய்களுக்கு கடிக்கும் திறன் குறைவாக இருந்தாலும், அந்த நாய்களுக்கு போதுமான அளவு என்று தெரிவிக்கின்றன. இந்த நாய்களுக்கு உடல் அமைப்பானது மிகவும் கட்டு மஸ்தானதாக இருக்கும். இதனுடைய உயரம் 50 சென்டிமீட்டர் இதனுடைய எடை 30 கிலோ இருக்கும். இந்த நாயால் கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நாய்கள் உலகின் மிக ஆபத்தான நோய்களின் பட்டியலில் ஒன்று என்று கூறலாம். இந்த நாயை வளர்ப்பது மற்ற நாய்களை வளர்ப்பது போல் சாதாரண விஷயம் இல்லை என்று தெரிவிக்கின்றார்கள். அமெரிக்காவில் இந்த நாயை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.