மேட்ரிமோனி தளத்தில் திருமணத்திற்கு பதிவு செய்தவருக்கு வேலை வாய்ப்பு கிடைத்த சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது.
தற்போது இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பலரும் தங்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டுள்ளனர். பலர் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி ஏறி, இறங்கி அலைந்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் வேலை உங்களை தேடி வரும் என்பது இங்கே ஒருவருக்கு நடந்துள்ளது. பெங்களூருவை மையமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமொன்றின் இணை நிறுவனர் உதிதா பால் என்ற பெண் திருமண வரன் தேடி jeevasathi.com என்ற வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார்.
What getting disowned from father looks like. pic.twitter.com/nZLOslDUjq
— Udita Pal 🧂 (@i_Udita) April 29, 2022
அந்த பெண்ணுக்கு அந்த வெப்சைட்டில் பதிவு செய்வதற்கு முழு விருப்பம் இல்லை. இருப்பினும் அவரது தந்தையின் வற்புறுத்தலால் அவர் பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து இருவருமே இந்த புரோஃபைலை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளனர். அதே வெப்சைட்டில் ஒரு இளைஞன் மணமகள் தேவை என்று பதிவு செய்து இருந்தார். அவரின் விவரங்களை பார்த்த உதிதா அவரின் கல்வித் தகுதி, பணி அனுபவம், எதிர்கால திட்டம் போன்றவை அவரின் நிறுவனத்திற்கு தேவைப்படும் வகையில் இருந்ததால் அவரை திருமண வரனாக அணுகாமல், வேலை கொடுக்கும் அதிகாரியாக பேசி தங்கள் நிறுவனத்தில் இணையும் படி கேட்டுள்ளார். மேலும் நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதைப் பார்த்த உதிதாவின் அப்பா திருமணத்திற்கு வரன் பார்க்க சொன்னால் நீ வேலைக்கு ஆள் சேர்த்துக் கொண்டு இருக்கிறாயா? என்று கேட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அந்த நபர் கேட்ட சம்பளம் மற்றும் கோரிக்கை உதிதாக்கு ஏற்றதாக இல்லை என்பதால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இருப்பினும் வாழ்க்கைக்குத் துணை தேடும் இடத்தில் வேலைக்கு ஆள் எடுத்த உதிதாவின் செயலை பலரும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர். உங்களுக்கு கூட மேட்ரிமோனி வெப்சைட்டில் இதுபோன்று நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.