இன்றைய காலகட்டத்தில் சேமிப்புகள் மற்றும் முதலீட்டிற்கு சிறந்த தேர்வாக வங்கிகளை விட போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்தான் உள்ளன. சாதாரண மக்கள் முதல் வசதி உள்ளவர்கள் வரை அனைவருமே போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தேடிச் செல்கின்றனர். அவ்வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் சேமிப்பு திட்டம் என்ற போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் உள்ளது. அவ்வாறான திட்டங்களில் மிக முக்கியமானது கிராம சுமங்கல் யோஜனா திட்டம். பணத்தேவை உள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.
இதில் 10 லட்சம் பணத்திற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டு திரும்ப அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி. கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்களுக்கு பணத்தை திருப்பி தருவதோடு காப்பீட்டையும் தருகின்றது. இதில் இரண்டு வகையான திட்டங்கள் அமலில் உள்ளன. அதில் ஒன்று அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றொன்று கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம். அதிலும் 15 ஆண்டு கால திட்டம், 20 ஆண்டு கால திட்டம் என்று இரண்டு உள்ளது.
இந்தத் திட்டத்திற்கான குறைந்தபட்ச வயது 19, அதிகபட்சமாக 45 வயது. 15 ஆண்டுகள் பாலிசியில் ஆறு ஆண்டுகள்,ஒன்பது ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகள் முடிந்த பின்னர் 20 முதல் 25 சதவீதம் பணம் திரும்பக் கிடைக்கும். மீதமுள்ள 40 சதவீத பணம் உதிர்வுக்கான போனஸ் உடன் சேர்த்து வழங்கப்படும். அதனைப் போலவே 20 ஆண்டு பாலிசியில், 20% பணம் எட்டு ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் முடிந்தவுடன் கிடைக்கும். மீதமுள்ள 40% பணம் முதிர்வு காலத்தில் போனஸ் உடன் சேர்த்து வழங்கப்படும்.
கிட்டத்தட்ட போனஸ் மட்டுமே 7 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்திற்கான பிரீமியம் தொகை நாளொன்றுக்கு 95 ரூபாய் மட்டுமே,25 வயதான ஒருவர் 7 லட்சத்திற்கான பாலிசியை 20 ஆண்டுகளுக்கு எடுத்துக்கொண்டால் அவர் ஒரு மாதத்திற்கு ரூ.2,852 செலுத்த வேண்டும். அதாவது தினமும் 95 ரூபாய் சேமித்தால் போதும். எனவே இந்தத் திட்டத்தில் தினமும் 95 ரூபாய் சேமித்தால் போதும் 14 லட்சம் ரூபாய் பெறலாம்.