Categories
மாநில செய்திகள்

அடடே..! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையில் இந்த ஒரு வருட காலத்தில் திமுக அரசு செய்த சாதனைகள் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதன் காரணமாக 9 லட்சத்து 32 ஆயிரம் ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி 7 லட்சத்து 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று 2021 டிசம்பர் மாதத்தில் முதல் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ஆசிரியர்கள், பென்ஷன் தாரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 14 சதவீதம் அதிகரிக்கபடுவதாக அறிவிக்கப் பட்டது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது. இதனையடுத்து 2022 ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசு ஊழியர்கள் அதிகமாக பயன் அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |