2008 ஆம் ஆண்டு வெளியான தி டார்க் நைட் இப்படத்தில் ஹீத் லெட்ஜர் ஏற்று நடித்த ஜோக்கர் கதாபாத்திரத்தை பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். அவர் உண்மையாகவே சைக்கோவாக வாழ்ந்து தனது 24 வயதில் இறந்து போனார் என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா?… ஆம் அதுதான் உண்மை. இவருக்கு சிறு வயதிலிருந்தே உலகமாக இருந்தது அவரின் பெற்றோர் தான். அவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டை விவாகரத்தில் போய் முடிந்தது. அப்போது ஹீத் லெட்ஜர் வயது 10. தான் ஒரு நடிகனாக வேண்டும் என்பது அவர் மனதில் ஆழமாக பதிந்து இருந்தது. அதற்காக அமெரிக்கா வந்து தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார்.
அதன்பிறகு பேட்மேன் படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்திற்காக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்திற்காக யாருடனும் பழகாமல் 43 நாட்கள் தன்னை தானே சிறையில் அடைத்து தனிமைப்படுத்திக் கொண்டார். அந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு அதிலிருந்து வெளிவர முடியாமல் அதே கதாபாத்திரத்தில் இருந்து ஒரு சைக்கோ போல மாறி உயிரையே விட்டார். அவரது இழப்பு அனைவர் மத்தியிலும் சோகத்தை தழுவியது. அது மட்டுமல்லாமல் உலகிலேயே இறந்த பிறகு ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆஸ்கர் விருதுபெற்ற ஒரே நடிகர் இவர்தான்.