வயது வந்தோருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நாட்டில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை வயது வந்தோருக்கு செலுத்த கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் அல்லது விருப்பம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டில் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தியவர்களுக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக வயது வந்தோருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் பயன்பாடுகள் குறைக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரியப்படுத்தியுள்ளது.