Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய பேருந்து…. படுகாயமடைந்த 14 பேர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி பலியான நிலையில் 14 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று அதிகாலை இந்த பேருந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள பூவம்பாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரியை செல்வராஜ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து லாரியில் பின்பகுதி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து சுக்குநூறாக நொறுங்கியது.

இதில் இடிபாடுகளில் சிக்கி சரஸ்வதி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெருமாள், செல்வராஜ், லாரி ஓட்டுனர் மணிகண்டன், கிருஷ்ணவேணி, ராமமூர்த்தி உள்பட 14 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |