இலங்கையில் நிதி நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு செல்ல முயற்சித்த 14 இலங்கை தமிழர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால், இலங்கையை சேர்ந்த தமிழ் மக்கள் படகுகள் மூலமாக அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இலங்கை தமிழர்கள் 14 பேர் தமிழ்நாட்டிற்கு செல்ல முயற்சித்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அந்த 14 நபர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.