இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்து மக்களும் செல்போன், கார், மோட்டார் சைக்கிள் என பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முந்தைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் சைக்கிள் இருப்பது என்பதே அபூர்வம் ஆகும். தற்போது மக்கள் கார், மோட்டார் சைக்கிள் போன்ற பல வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுகிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் அதிபர் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது காற்று மாசுபடுதலை தடுப்பதற்காக அனைவரும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
நெதர்லாந்து ஒரு சிறிய நாடாக இருப்பதால் அனைத்து மக்களும் இந்த உத்தரவை ஏற்று கொண்டனர். இருப்பினும் நாட்டில் உள்ள அனைவரும் இந்த உத்தரவை கடைபிடிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். இதனால் நெதர்லாந்து அதிபர் மார்க் ரூட் மிதிவண்டியை ஓட்ட வேண்டும் என்ற சட்டம் நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி அதிபரான எனக்கும் பொருந்தும் என கூறினார். இதனால் மிதிவண்டியை ஓட்ட வேண்டும் என்ற சட்டத்தை இயற்றிய நாளிலிருந்து இன்று வரை அதிபர் மார்க் ரூட் சைக்கிளில் தான் அலுவலகத்திற்கு செல்கிறார்.