ஜியோ நிறுவனம் அதிரடி சலுகை ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது prepaid வாடிக்கையாளர்களுக்கு Disney Plus hotstar subscription திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஐ.பி.எல் 2020 மேட்ச் நடந்து வருகிறது. இதற்காக Disney Plus hotstar வாடிக்கையாளர்களுக்காக இந்த குறுகிய கால சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜியோ நிறுவனம் Disney plus hotstar 1 year subscription திட்டத்தை வைத்திருந்தது. தற்போது prepaid வாடிக்கையாளர்களுக்காக 4 சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்களுக்கான 783 ரூபாய், 583 ரூபாய், 333 ரூபாய், 151 ரூபாய் கட்டணங்களுக்கான சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி ஏற்கனவே prepaid வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு Disney Plus hotstar உடன் 8GB data வழங்கப்படும். இதனையடுத்து 333 ரூபாய் prepaid திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்.எம்.எஸ், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் Disney Plus hotstar கிடைக்கும். இதனுடன் ஜியோ சினிமா, ஜியோ செயலி, ஜியோ நியூஸ் போன்றவைகளும் வழங்கப்படும். அதன்பிறகு 583 ரூபாய் prepaid திட்டத்தின் படி 1.5 ஜிபி டேட்டா, 56 நாட்கள் வேலிடிட்டி, 100 எஸ்.எம்.எஸ், Disney Plus hotstar கிடைக்கும். இதனுடன் ஜியோ சினிமா ஜியோ செயலி, ஜியோ நியூஸ் போன்றவையும் கிடைக்கும். மேலும் 783 ரூபாய் prepaid திட்டத்தின்படி தினந்தோறும் டேட்டா, எஸ்.எம்.எஸ், இலவச வாய்ஸ் கால், 84 நாட்கள் வேலிடிட்டி Disney Plus hotstar கிடைக்கும்.