அன்றைய காலத்தில் சாதாரண நோக்கியா போன் வாங்குவது பெரும் சிரமமாக இருந்தது. ஒரு வீட்டில் ஒரு போன் இருப்பதே பெரிய விஷயம். ஆனால் இப்போது ஒவ்வொரு வீட்டில் அனைவரிடமும் தனித்தனி போன் உள்ளது. அதுவும் ஸ்மார்ட்போன் மட்டும்தான். சாதாரண போன்கள் அனைத்தும் மாறி தற்போது அதில் ஐ போன்களின் மீது ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன்களை பொருத்த மட்டில் குறைந்த விலையில் நிரந்தர தளத்தில் பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட்போன் கிடைப்பதால் அதன் விற்பனையும் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அதுமட்டுமல்லாமல் 5ஜி போன்கள் வரை இப்போது வந்துவிட்டன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நடுத்தர மக்கள் இதுபோன்ற போன்களை வாங்க நினைக்கும் போது அதன் விலை குறைவாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் அவர்களுக்கு இந்த போன்கள் நல்ல தேர்வாக இருக்கும். அதுவும் இவை அனைத்தும் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கின்றன. இந்தியாவில் தற்போது விற்பனையாகும் மலிவு விலை ஸ்மார்ட்போன் poco M4 5G. இதன் விலையும் 15,000 ரூபாயை விட குறைவு தான். இதன் ஆரம்ப விலை ரூ.12,999.
மற்ற போன்கள்:
Vivo T1 5G – ரூ.15,990
OPPO A53 – ரூ.13,999
Samsung Galaxy F23 – ரூ.14,999