உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் வியக்கத் தக்க விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பெரும்பாலானவை நமக்கு தெரியாது. அப்படி ஒரு வியக்கத்தக்க விஷயம் தான் இது. ஒரு நாட்டில் 76 நாட்களுக்கு சூரியன் மறையவே மறையாது அது பற்றி உங்களுக்கு தெரியுமா?.. ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வேயில் சூரியன் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு மறையாமல் இருக்கும். அந்த குறிப்பிட்ட நாட்கள் முழுவதும் வெறும் பகல் பொழுதாக மட்டுமே இருக்கும்.
அந்தப் பகுதி நார்வே லேண்ட் ஆப் மிட்நைட் சன் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் இறுதி வரை சூரியன் மறைவதே இல்லை. இந்த காலத்தில் நார்வே முழுவதும் பகல் பொழுதாக இருக்கும். அதன்பிறகு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கும். அந்த நாட்கள் முழுவதும் இரவாகவே இருக்கும். இப்படி ஒரு சில நாடுகளில் சில நாட்கள் சூரியன் மறையவே மறையாது என்பது குறிப்பிடத்தக்கது.