Categories
உலக செய்திகள்

தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசிய முகமது அலி…. என்ன காரணம் தெரியுமா?….. வியப்பூட்டும் சம்பவம்….!!!

உலகின் முன்னாள் அதிகார குத்துச்சண்டை சாம்பியனும் உலகின் நன்கு அறியப்பட்ட விளையாட்டு வீரரான முகமது அலி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1960களில் உலகத்திலேயே மிகவும் பிரபலமான நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அமெரிக்காவை சேர்ந்த இவர் கருப்பின கூட்டத்தை சேர்ந்தவர். இளம் வயதிலேயே புறக்கணிப்பை சந்தித்தாலும் தம்மைப் போன்றவர்கள் அடக்குமுறைக்கு ஆளாவதை கண்டாலும் கலக மனநிலையிலேயே வளர்ந்தார். இன்று ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்தை யாவது பெற்றுவிட வேண்டும் என்று பல நாடுகளும், ஏராளமான வீரர்களும் ஏங்கிக் கிடக்கின்றனர்.

ஆனால் தனக்கு கிடைத்த தங்கப் பதக்கத்தையே ஆற்றில் தூக்கி எறிந்தவர் முகமது அலி. அன்றைய காலகட்டத்தில் கருப்பின மக்களை வெள்ளை இனத்தவர்கள் வெறுத்து ஒதுக்கினர். எப்படியாவது அவர்கள் முன்பு வாழ்ந்த காட்டியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கென ஒரு சரித்திரத்தை படைத்தவர் முகமது அலி. 1960 ஆம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற போது அவருக்கு வயது 18. வரலாற்றை புரட்டி ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அவரது பெயரை தேடினால் காணமுடியாது.

ஏனென்றால் அப்போது அவரது பெயர் கேசியஸ் கிளே. அதன் பிறகுதான் தனது பெயரை முகமது அலி என மாற்றிக் கொண்டார். அவர் 1960 ஆம் ஆண்டு குத்துச்சண்டை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகு அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் 2 சீஸ் பர்கர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அங்கு வேலை செய்த ஒரு பெண்,நீ யாராக வேண்டுமானாலும் இரு உனக்கு தர முடியாது என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் முகமது அலி கருப்பு இனத்தை சேர்ந்தவர் என்பது. அன்றைய காலகட்டத்தில் கருப்பின மக்கள் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று விட்டால் இதெல்லாம் மாறிவிடும் என்று நினைத்த முகமது அலி, தான் தங்கப்பதக்கம் வென்ற பிறகு உணவகத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அந்த தங்கப்பதக்கத்தை அவர்கள் மதிக்காததால், இனிமேல் இது எனக்கு தேவையில்லை என்று முகமது அலி அந்த தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்தார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து இந்த இனப் பிரச்சனை முடிவுக்கு வந்தபிறகு 1996 ஆம் ஆண்டில் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் அவர் தூக்கி எறிந்த அந்த தங்கப் பதக்கத்தை இற்கு பதிலாக வேறு ஒரு தங்கப் பதக்கம் அவருக்கு அணிவிக்கப்பட்டது.

Categories

Tech |