ஆப்கானிஸ்தானில் இன்று பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 83 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஹிரட் நகரில் இருந்து தலைநகர் காபுல் நோக்கி இன்று ஒரு பயணிகள் விமானம் 83 பேருடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானம் டெக்யாக் மாவட்ட பகுதியை கடந்து சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 83 பேரும் பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து சம்பவம் அறிந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போதுவரை முழு விவரங்கள் ஏதும் தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.