Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கர்ப்பமான 15 வயது சிறுமி…. முதியவர்களின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இரண்டு முதியவர்கள் இணைந்து சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முதியவர்களான பாலமுருகன்(60), ரமேஷ்(60) ஆகியோர் இணைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |